என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பொது தேர்வுகளில் - புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகள்100 சதவீத தேர்ச்சி பெற இலக்கு
- புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியின் வாயிலாக இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு, தலைமை யாசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும். மேலும் அரசுப்பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் 3 இடங்களுக்குள் புதுக்கோட்டை வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அன்றாடம் பள்ளியில் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யக்கூடிய பணிகளை மறக்காமல் பதி வேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் தேவைப்படும் விலையில்லா பேருந்து பயண அட்டை சார்ந்த தகவல்களை உடனடியாக போக்குவரத்துக்கிளைக்கு அளித்திட வேண்டும். 6- ம் வகுப்பு முதல் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த விபரங்களை மீண்டும் சரிபார்த்து சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய் யவேண்டும். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை எழுதும் மற்றும் வாசிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத்தி றனை உரிய காலத்திற்குள் 100 சதவீதம் அடைய பாடுபட வேண்டும். பள்ளி நலனில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கி ணைத்து பள்ளியின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் 10,12 - ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வில் 80 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகள் ஒவ்வொன்றையும், தனித் தனியாக பாடவாரியாக பகுப்பாய்வு செய்து 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆலோசனைகள் வழங்கி னார். இந்த மீளாய்வு கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ், அறந்தாங்கி ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, இளைய ராஜா மற்றும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்