search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆலமரக்கிளை முறிந்து விழுந்து மூதாட்சி காயம்
    X

    ஆலமரக்கிளை முறிந்து விழுந்து மூதாட்சி காயம்

    • ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்சி காயமடைந்தார்
    • 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம்

    புதுக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அருகே கோமாபுரம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மணியம்மை (வயது 65). இவர் வீட்டின் அருகில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் வீதியில் இருப்பதால் அந்த வீதியை ஆலமர தெரு என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் பழமை வாய்ந்த இந்த ஆலமரம் 3 ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலையும் எதிர்கொண்டு நிமிந்து நின்றது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கிளைகளில் நீர் தேங்கி கனம் தாங்காமல் மிகப்பெரிய ஆலமரக்கிளை ஒன்று மணியம்மை வீட்டின் மீது விழுந்தது. இதில் மணியம்மை காயம் அடைந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம் அடைந்த மணியம்மையை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் ஆல மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கான பாதையை சரி செய்து கொடுத்தனர். ஆலமரத்தின் கிளைகள் பகல் நேரத்தில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.

    Next Story
    ×