search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு எதிர்ப்பு
    X

    பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு எதிர்ப்பு

    • பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
    • நிகழ்ச்சியை ரத்து செய்து வழியிலேயே திரும்பியதால் பரபரப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் மற்றும் சேந்தன்குடி அரசு தொடக்க பள்ளிகளுக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா அ.தி.மு.க. பரிந்துரையின் பெயரில் மேஜை நாற்காலி வழங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொள்வதாக இருந்தது.

    இந்நிலையில் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ., ஆலங்குடி தொகுதிக்கு வந்து மேஜை நாற்காலிகள் வழங்கினால் அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட கூடும் என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் தி.மு.க.வை சேர்ந்த திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி புகார் தெரிவித்தார்.

    இந்நிலையில் கீரமங்கலம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது கீரமங்கலம் போலீசார், அவருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு திரும்பி சென்றார். இதனை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சியும் ரத்த செய்யப்பட்டது.

    ஆனால் விஜயபாஸ்கர் பள்ளி நிகழ்ச்சிக்கு வருவார் என்று கொத்தமங்கலம் பள்ளி முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் காத்திருந்து ஏமாற்றத்துடுன் திரும்பி சென்றனர்.

    இது குறித்து விசாரித்தபோது, கட ந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ. மெய்யநாதன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அவரை அழைக்காமலேயே தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் அ.தி.மு.க.வினர் நடத்தினர்.

    ஆலங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மெய்யநாதன் வழங்கியதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி சைக்கிள் வழங்கியதாக ஆலங்கு டி, கீரமங்கலம் காவல் நிலையத்தில் 2019 வருடத்தில் மெய்யநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தற்போது மெய்யநாதன் அமைச்சராக இருக்கும்போது அவர் இல்லாமல் அ.தி.மு.க.வினர் நிகழ்ச்சி நடத்த முயன்றதால் தி.மு.க.வினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்றனர்.

    Next Story
    ×