search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கந்தர்வகோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மண்வளம் குறித்தும், சுகாதாரம் காப்பது குறித்தும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் என்னுடைய தாய் மண்- எனது தேசம் என்ற தலைப்பில் பொது சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் மண் வளத்தை காக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுவதை தடுத்து மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மரக்கன்றுகள் நடவு செய்து கிராமத்தின் பொது சுகாதாரம் மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்துதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றிய ஆணையர் பால் பிரான்சிஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் ,வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மண்வளம் குறித்தும், சுகாதாரம் காப்பது குறித்தும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ஒருங்கிணைத்திருந்தார்.

    Next Story
    ×