என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னையில் பாதிக்கப்பட்டோர் பொன்னமராவதியில் போராட்டம்
- சென்னையில் பாதிக்கப்பட்டோர் பொன்னமராவதியில் போராட்டம்
- அதிகவட்டி தருவதாக மோசடி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவரது மகன் அலெக்சாண்டர். இவர்கள் இருவரும் சென்னையில் தங்கிக்கொண்டு, துபாய், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உளள எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு லட்சம் கொடுத்தால் அதற்கு வட்டியாக மாதம் தோறும் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இது குறித்து அறிவிப்பையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் இதில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு பல்வேறு வித நம்பிக்கை வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர்.
இதனை நம்பி தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 1.25 லட்சம் பேர் ஆறாயிரம் கோடிவரை வரை முதலீடு செய்ததாக கூறப்படுகின்றது. இதில் அவர்களது சொந்த ஊரான கடியாப்பட்டியில் காமதேனு பாபா கோவில் கட்டியது, நிவாரண நிதி வழங்கியது என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் மேற்கொண்டனராம்.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக வட்டி தரவில்லை. ஒரு கட்டத்தில் மொத்த தொகையையும் திருப்பித் தந்துவிடுவதாக உறுதியளித்துள்ளனர். அதன்பிறகு சவுந்தராஜன் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் தாங்கள் முதலீடு செய்த பணத்தை எப்படியும் மீட்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பு காமதேனு பாபா திருக்கோயிலுக்கு வந்த 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் திருமயம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.






