என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![புதுக்கோட்டை பகுதிகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு புதுக்கோட்டை பகுதிகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு](https://media.maalaimalar.com/h-upload/2022/10/16/1777800-88wnload.jpg)
புதுக்கோட்டை பகுதிகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை–யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா விராலூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
இதில் விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமயத்தில் பழமை வாய்ந்த குடவரை கோவிலான சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைெபற்றது. முன்னதாக சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.