search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது - அமைச்சர் பேச்சு
    X

    மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது - அமைச்சர் பேச்சு

    • மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • அரசினர் பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா

    புதுக்கோட்டை:

    மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது கணினி ஆய்வகம், நூலகம் திறந்து வைத்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.

    ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும் போது,

    ஆலங்குடி மண்ணில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்கும் இப்பள்ளியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பயிலும் மாணவிகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகம் கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம் மூலம் உங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    நம் தமிழக முதல்வர் 2 ஆண்டு காலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டுள்ளனர்.மாணவர்கள் அனைவரும் அதிகமாக படிக்க வேண்டும்

    அறிவார்ந்த சமுதாய மக்களாக உருவாக வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் காணாமல் போய் உள்ளார்கள். நூற்றுக்கு முப்பத்தைந்து மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சாதித்து உள்ளார்கள். எனவே மதிப்பெண் வைத்து மாணவர்களை எடை போடக் கூடாது.

    மாணவர்கள் அனைவரும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கேள்வியையும் அதற்கான பதிலையும் எழுதிப் படியுங்கள்.ஒரு முறை எழுதி ப்படிப்பது,பத்து முறை படிப்பதற்கு சமம்.எனவே மாணவர்கள் அனை வரும் நன்றாக படித்து சாதிக்கணும்.மற்றவர்கள் மதிக்கும் அளவு உயரனும்.நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். நான் மறமடக்கி அரசுப்பள்ளியில் பயின்றவன்.எனக்கு உயர்கல்வி படிக்க வசதி இல்லை.கலைஞர் தந்த இலவச உயர்கல்வியால் எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதே போல் ஆலங்குடி பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கலை அறிவியல் கல்லூரியை தந்தவர் நம் தமிழக முதல்வர் தான்.எனவே மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    விழாவில் ஒன்றியக் குழுத்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் ( மேற்கு) தங்கமணி அரு.,வடிவேலு( தெற்கு) நகரச்செயலாளர் பழனிக்குமார், ஒருங்கிணை ந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் மாரிமுத் து, இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனிய சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர், ஆசிரி யர்கள் மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×