என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
- கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ் குமார் (வயது19).இவர் கந்தர்வகோட்டை அருகே முதுகுளம் கிராமத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோழிப்பண்ணை அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story






