என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
- பீரோவை உடைத்து துணிகரம்
- தனிப்படை விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் காந்தி நகர் பகு தியை சேர்ந்தவர் உமா (வயது 50). முருங்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள் ளியில் ஆசிரியையாகவேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் ஜான்சன்.சென்னை யில் குடிநீர் வடிகால் வாரியத் தில் வேலை செய்து வருகி றார். நேற்று காலை ஆசிரியை உமா வழக்கம் போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றார்.
பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் பணம் ரூ.1,000 திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தக்கோலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.






