என் மலர்
உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகங்களில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும்
- செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
- புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான அன்னிய செலவானி பெற்று தருகின்ற மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். இதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னோடி மாவட்டம் ஆகும்.
தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகளவில் பணியாற்றி வந்தார்கள்.
எந்திரங்கள் வந்த பிறகு பாதி பேர் வேலை இழந்துள்ளார்கள். எனவே வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும்
தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்கள் எந்த தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் அதில் நிர்வாக ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அரசு ஒதுக்கீடாக இருந்தாலும் அதனுடைய கல்வி கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும்.
இதுபோன்று தெலுங்கானா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்வி கட்டணத்தை அரசு செலுத்துகிறது. அதே போன்று தமிழகத்திலும் கல்வி கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.
ஏற்கனவே இருந்த பாராளுமன்ற கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிலை அமையுமா? மேலும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும், கட்டிட வளாகத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம். மேலும் எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது கொள்கை ரிதியாக நியாயமானது.
இந்திய குடியரசு கட்சியும் இதனை ஆதரிக்கிறது. வருமான வரித்துறை சோதனை என்பது இந்தியா முழுவதும் மத்தியில் ஆளுகின்ற கட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்களுக்கு நடக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தலைமை நிர்வாகிகள் தன்ராஜ், கவுரிசங்கர், மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார், மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாவட்ட பொருளாளர் ராஜாராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.