search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கலை நிகழ்ச்சியில் அசத்திய ராணிப்பேட்டை மாணவிகள்
    X

    மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி பாராட்டி வாழ்த்திய போது எடுத்த படம்.

    மாநில அளவிலான கலை நிகழ்ச்சியில் அசத்திய ராணிப்பேட்டை மாணவிகள்

    • கலெக்டர் பாராட்டு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலைத் திருவிழாவில் முதல் இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா நிகழ்ச்சியில் 8 அரசு பள்ளிகளை சார்ந்த 16 மாணவ மாணவிகள் பங்கெடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்று வந்துள்ளனர்.

    இந்த மாணவ மாணவிகள் தங்கள் பெற்ற பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாணவ மாணவிகள் மேலும் தங்கள் திறமைகளை வளர்த்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டுமென வாழ்த்தினார். மேலும் மாணவ மாணவிகள் ஊட்டச்சத்து சாப்பாடுகளை சாப்பிட வேண்டும். ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் மாணவிகள் வளர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    மாநில அளவில் நரசிங்கபுரம், மின்னல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 9 மாணவிகள் பாவனை நடிப்பில் முதலிடத்திலும், அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராமகிருஷ்ணன் நாதஸ்வரம் இசையில் முதலிடத்தையும், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவன் முகேஷ் எக்காளம் இசையில் 2-ம் இடத்தையும், கொடைக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பன்னகசயனன் மிருதங்கம் இசையில் 2-ம் இடத்தையும், பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹேமாவதி காகித வேலைப்பாடு கலையில் 2-ம் இடத்தையும், வள்ளுவம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுல கிருஷ்ணன் கோண கொம்பு கலையில் 3-ம் இடத்தையும், பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிசவிதா டிஜிட்டல் ஆர்ட் கலையில் 3-ம் இடத்தையும், அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலை ப்பள்ளி தாமரைப்பாக்கம் சூர்யா சங்கு முழக்குதல் போட்டியில் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.இவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் பெற்றோர்களை வாழ்த்து தெரிவித்து அனைவரையும் கலெக்டர் வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, மாவட்ட கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் நாநிலதாசன், உதவி திட்ட அலுவலர் பள்ளி கல்வித்துறை துரைவேல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×