என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அரக்கோணம் அருகே கண்டக்டர் மீது தாக்குதல் அரக்கோணம் அருகே கண்டக்டர் மீது தாக்குதல்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/02/1859543-thakuthal.webp)
அரக்கோணம் அருகே கண்டக்டர் மீது தாக்குதல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சாலையில் பஸ்சை நிறுத்தி போராட்டம்
- பஸ்சின் படியில் தொங்கியபடி வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
அரக்கோணம்:
காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த தனியார் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி இளைஞர்கள் சிலர் வந்தனர். இதனால் பஸ் கண்டக்டர் சிவா (வயது 34) படியில் தொங்கியபடி வந்தவர்களை உள்ளே வருமாறு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரி கிறது. இதனிடையே பஸ் பள்ளூர் நிறுத்தம் வந்தபோது வாக் குவாதத்தில் ஈடுபட்டவர்கள் இறங்கி சென்றனர்., பின்னர் பஸ் தக்கோலம் கூட் ரோட்டிற்கு வந்த போது அடையாளம் தெரியாத 5 பேர் திடீரென பஸ் கண்டக்டரை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சாலையில் பஸ்சை நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீ சார் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
![sidkick sidekick](/images/sidekick-open.png)