என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிருந்தாவன் எக்ஸ்பிரஸா? கோவை எக்ஸ்பிரஸா? ரெயில் பெட்டியில் இருந்த பெயர் பலகையால் பயணிகள் குழப்பம்
- பெங்களூருக்கு செல்வதாக அதிகாரிகள் தகவல்
- உறுதியான பெயர் பலகை வைக்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
சென்னை - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 8. 45-க்கு வந்தது.
இந்த ரெயிலின் கடைசி பெட்டியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கோவை எக்ஸ்பிரஸ் என்றும், மற்ற பெட்டிகளில் பெங்களூர்- சென்னை-கோவை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்றும் இருந்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
அந்த ரெயில் கோவைக்கு செல்கின்றதா அல்லது பெங்களூருக்கு செல்கின்றதா என தெரியாமல் குழப்பத்துக்கு ஆளாகினர். பின்னர் அருகே இருந்த அதிகாரிகளியிடம் கேட்டபோது:-
அந்த ரெயில் பெங்களூருக்கு செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூர் செல்லும் பயணிகள் அந்த ரெயிலில் ஏறினர்.
இதுபோன்று ரெயில் பெட்டிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் பலகைகள் வைப்பதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவர்.
எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயணிகளின் குழப்பத்தை நீக்கும் வகையில் அவர்களுக்கு இந்த ரெயில் எங்கு செல்கின்றது என்ற உறுதியான பெயர் பலகையை வைத்து ரெயிலை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.