search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்சிக்கு அதிகாரிகள் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி
    X

    ஆட்சிக்கு அதிகாரிகள் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி

    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூறியதாவது:-

    ஏற்கனவே செய்த பணிகளுக்கு பில் கொடுக்காததால் மற்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவைப்பது அதிகாரிகளின் வேலை ஆகும். நிலுவைகளில் உள்ள பணிகள் பல இடங்களில் முடிவடைந்துள்ளன.

    அரசு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்ட பின்னர் தான் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கபடுகிறது.அதிகாரிகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    நிலுவையில் உள்ள பணிகளை கண்காணிப்பது எங்கள் வேலை இல்லை. ஒப்பந்ததாரர்கள் முறையாக ஜி.எஸ்.டி செலுத்தவில்லை, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    அதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கூட்ட தீர்மானத்தின் படி அதிகாரிகள் நடக்கவேண்டும்.முடிந்த பணிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்,தேவையற்ற காரணங்களை கூறி முடக்க கூடாது என்ற குற்றச்சாட்டுகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட கவுன்சிலர்கள் சக்தி, செல்வம், காந்திமதி உள்பட பலர் பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் நவ்லாக் ஊராட்சியில் சிப்காட்டில், சிப்காட் தொழில் நிறுவனத்தின் மூலம் இணைப்பு சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைப்பட்ட சாலை ஆகும்.

    இந்த சாலையை கடந்து தான் மணியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஐ.ஒ.பி நகர், கீழ் மணியம்பட்டு மற்றும் நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட வ.ஊ.சி நகர், திருவள்ளுவர் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். சிப்காட் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

    இச்சாலை சரியில்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சிப்காட் நிறுவனம் மூலம் இச்சாலைகளை புதுப்பித்து அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பல பொதுத்துறை வங்கிகளில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் வங்கிக்கு வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

    அதனால் வங்கிகள் உள்ள இடத்தில் பொது கழிப்பிடம் அமைத்தும், இடவசதியில்லாத இடங்களில் நடமாடும் கழிவறையாவது அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட ஊராட்சி உதவியாளர் உமாபதி நன்றி கூறினார்.

    Next Story
    ×