என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தனி கவனம் செலுத்த வேண்டும்
- கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுரை
- பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஒரு மைல் கல்லை எய்திட முழு மனதுடன் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பலதரப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து கல்வி கற்க பள்ளிகளுக்கு வருகின்றனர்.
அவர்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தாங்கள் பணி புரியும் பள்ளியை என்னுடைய பள்ளி, எங்களுடைய கல்வி நிறுவனம் என்று பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய பள்ளியின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் தனியார் பள்ளிகள் எவ்வாறு செய்கின்றனரோ அதே போன்று சிறிது கவனம் செலுத்தி தூய்மையுடன் வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டி, பொறாமைகள் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.
ஆசிரியர்கள் இனிவரும் காலங்களில் தாங்கள் பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.
என்பது உள்பட பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.