search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை
    X

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை

    • வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட ஜெ.சி.கே நகர், ஹவுசிங் போர்டு, பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன.

    கூட்டமாக தெருக்களுக்குள் சுற்றித்திரி வதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்தப் பகுதிகளில் சமீப காலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த தெருநாய்கள் அனைத்து தெருக்களிலும் அலைந்து திரிவதால் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு மற்றும் வேறு இடங்களுக்கு செல்லும் போது ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியதாக உள்ளது.

    காலை நேரத்தில் பணிக்கு செல்வோரும் பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்புவோரும், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் மாலை நேரங்களில் டியூசன் செல்லும் மாணவர்களை துரத்திச் சென்று கடிக்கிறது.சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களையும் விடாமல் துரத்துவதால் மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.

    பொது மக்களின் நலன் கருதி நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×