என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செஸ் விளையாட்டு மனவலிமை, அறிவாற்றலை ஊக்குவிக்கிறது
- ராணிப்பேட்டை கலெக்டர் பேச்சு
- ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை :
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28.7. 2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44 வது உலக செஸ் போட்டி நடைபெறுகிறது.
இதையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் தோறும் சதுரங்க செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய முகுந்தராயபுரம் மற்றும் வாணாபாடி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தலைமை தாங்கி மகளிர் குழுக்களுடன் இணைந்து மாணவ மாணவர்களுடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-
சதுரங்கப் போட்டி என்பது இந்தியாவில் தோன்றியது. மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றி சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே இப்போட்டி மன்னர்களிடையே நடைபெற்று வந்தது. அரசர்கள் எவ்வாறு போர் புரிய வேண்டும் எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்து மனதிற்கும் உடலுக்கும் ஊக்கத்தை கொடுக்கக்கூடிய போட்டியாக நடைபெற்றுள்ளது. பின்னர் மற்ற உலக நாடுகளுக்கும் பரவி அனைத்து நாடுகளிலும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. எவ்வாறு திட்டமிடுதல், எவ்வாறு தற்காத்துக் கொள்ளுதல், வெற்றியை தடைகளை தாண்டி எப்படி பெறுவது குறித்து மனதிற்கும் மூளைக்கும் ஆராய்ந்து செயல்படக்கூடிய ஒரு விளையாட்டு போட்டியாக சதுரங்க விளையாட்டு விளங்குகிறது.இதை மாணவர்களுக்கும் பொதுமக்களும் என அனைவரும் விளையாடும் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்ற சிந்தனை பாங்கு உயர்வடையும் மூளையின் நரம்புகள் சுறுசுறுப்பு அடைய செய்யும், மனவலிமை அறிவாற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விளையாட்டு இருக்கின்றது. இப்போட்டியில் அனைவரும் பங்கு பெற்று தன்னுடைய அறிவாற்றலை பெருக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் பள்ளிகளிலும் சதுரங்க போட்டிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகள் இதை பயன்படுத்தி நன்கு சதுரங்க விளையாட்டை விளையாட வேண்டும்.
செஸ் போட்டியானது நமது தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதனை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு அடையும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், உதவி திட்ட அலுவலர்கள் ஷாகூல் ஷமீத், சுபாஷ் சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் முருகன், ஈஸ்வரி, மகளிர் சுய உதவி குழு பெண்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்