என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசுக்கு யோகா பயிற்சி
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் நடவடிக்கை
- மன அழுத்தம் குறைக்கும் என அறிவுரை
அரக்கோணம்:
அரக்கோணம் பகுதிக்கு உட்பட்ட போலீசார் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான யோகா பயிற்சி அரக்கோணம் தூய அந்தரய ஆலய வளாகத்தில் ஏ.எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் நடைபெற்றது.
தன்னார்வ தொண்டு நிறுவன சார்பாக நடைபெற்ற யோகா பயிற்சியில் இதயம் மூளை சிந்தனை போன்ற செயல்பாட்டிற்கான விளக்கங்களையும் அதன் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளையும் பயிற்சி வாயிலாக கற்றுத் தரப்பட்டது.
போலீசாருக்கு பணி நிமித்தமாக ஏற்படும் தூக்கமின்மை போன்ற நேரங்களில் மேற்கொள்ளப்படும் யோகா அதன் மூலம் பயன்கள் விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மூலம் மன அழுத்தம் குறைந்து உடல் வலிமை பெறும் என்றும் தொடர்ந்து இந்த பயிற்சி வாயிலாக உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள இந்த யோகா பெரும் உதவி ஆக இருக்கும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
Next Story






