search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர்., கொடுத்த பட்டாவை மீட்டு தாருங்கள் -  முதியவர் மனு
    X

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு காெடுக்க வந்த முதியவர்

    எம்.ஜி.ஆர்., கொடுத்த பட்டாவை மீட்டு தாருங்கள் - முதியவர் மனு

    • பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது.
    • போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    திருப்பூர் :

    பொங்கலூர் ஒன்றியம், கேத்தனூர் - எட்டமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், (வயது 73).பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு தள்ளாடியபடி வந்த இவர் எனது பட்டாவை மீட்டு தாருங்கள் என அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    இது குறித்து ஈஸ்வரன் கூறியதாவது:-

    ஈரோடு ரெயில் நிலையத்தில் கொடி அசைக்கும் வேலை பார்த்து வந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது. மகள் திருமணமாகி தனியாக உள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இருந்தபோது, எனக்கு கேத்தனூரில்15 சென்ட் இடம் கொடுத்தார்.அந்த இடத்தின் பட்டா எனது பெயரில் உள்ளது.

    மனைவியும் இல்லாததால் தனியாக வீடு கட்டி வசித்து வருவதை அறிந்த சிலர் இரண்டு ஆண்டுக்கு முன் எனது வீட்டில் புகுந்து பட்டா சான்றிதழை பறித்துகொண்டு, விரட்டி அடித்து விட்டனர். அதில் முறைகேடாக அவர்களது பெயரை சேர்த்துள்ளனர்.தற்போது வீடும் இல்லாமல், ஓய்வூதியத்தை கொண்டுஒரு நேரம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர்., கொடுத்த பட்டாவை எனக்கு மீட்டு தாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.முதியவரிடம் விசாரித்த அதிகாரிகள், இது குறித்து போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்என கூறி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×