என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
142 அடியை எட்டுவதற்காக முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு வைகை அணை நீர்மட்டம் உயர்வு
- அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது. மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 487 அடியாக சரிந்துள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது. மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 9-ந்தேதி 136 அடியை எட்டியவுடன் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை பொதுப்பணி த்துறையின ரால் விடப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை கடந்து விட்டதால் 142 அடி வரை தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 487 அடியாக சரிந்துள்ளது.
ரூல்கர்வ் விதிமுறைப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் இடுக்கி மாவ ட்டத்திற்கும், லோயர்கேம்ப் வழியாக தமிழக பகுதிக்கும் திறக்கப்படும். இதனை தவிர்க்கும் வகையில் நேற்று அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டது.
நீர் இருப்பு 7504 மி.கனஅடியாக உள்ளது. பெரி யாறு அணை நீர்மட்டத்தை மே 31-ந்தேதி வரை 142 அடிவரை தேக்கி வைத்து கொள்ளலாம்.
எனவே நேற்று 1106 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 141.40 அடியாக உள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து 67.03 அடியாக உள்ளது. நீர்வரத்து 2158 கனஅடி. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 5904 மி.கன அடியாக உள்ளது. கனமழை நீடிக்கும் பட்சத்தில் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணி த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிட ப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. வரத்து 50 கன அடி. திறப்பு 30 கன அடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்