search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
    X

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் குறியீடு வரையும் பணி நடைபெற்ற காட்சி.

    சின்னசேலத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

    • கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
    • இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை துறை சில தினங்களுக்கு முன்பு வருகிற 28-ந் தேதி அன்று சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்தவர்கள் மற்றும் நில அளவியர் ஆகியோர் நேற்று அம்சாகுளத்தில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கூகையூர் ரோடு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்து மஞ்சள் நிறத்தில் அம்பு குறியீடு போடப்பட்டது.

    பின்னர் கடை உரிமை யாளர்களிடம் வருகின்ற 28-ந் தேதிக்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை தங்களு டைய செலவிலே எடுக்கு மாறு தெரிவித்தனர். மீறும் பட்சத்தில் 28-ந் தேதி அன்று ஆக்கிரமிப்புகளை எடுக்கும்போது அதற்கான ஏற்படும் பொருள்கள் சேதாரத்தை, தேசிய நெடுஞ்சாலை துறையோ, பேரூராட்சி நிர்வாகமோ ஏற்றுக் கொள்ளாது என கடை உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர்.

    Next Story
    ×