என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடுமலை நூலகத்தில் குடியரசு தினவிழா
- நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றினார்.
- முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழா குறித்து பேசினர்.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் 74 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நூலகர் மகேந்திரன் வரவேற்றார் .
நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றினார். இதில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நல சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவக்குமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழா குறித்து பேசினர்.
நிகழ்ச்சிகளை மகளிர் வாசகர் வட்ட தலைவர்- பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் கலாவதி ,பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Next Story






