search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழுகிய சீமை கருவேலமரங்களை அகற்ற கோரிக்கை
    X

     தொடர் தண்ணீர் தேக்கத்தின் காரணமாக சீமை கருவேல மரங்கள் அழுகி உள்ளதை படத்தில் காணலாம்.

    அழுகிய சீமை கருவேலமரங்களை அகற்ற கோரிக்கை

    • சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டது.
    • தண்ணீர் தேக்கத்தின் காரணமாக சீமை கருவேல மரங்கள் அழுகி உயிரிந்துள்ளன.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கொளகத்தூர் சோழவராயன் ஏரி 450 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கன மழையால் சின்னாறு அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது.

    இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் விவசாயமும் தற்போது செழிப்படைந்து உள்ளது. தண்ணீர் நிரம்புவதற்க்கு முன்பு ஏரியில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றபடாமல் இருந்தது. தற்போது தண்ணீர் தொடர் தேக்கத்தின் காரணமாக ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் அனைத்தும் அழுகி உயிரிந்துள்ளன.இந்த மரங்கரளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×