search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களில்  சக்கர நாற்காலி  வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுகோள்
    X

    கோப்புபடம்

    கோவில்களில் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுகோள்

    • விசாலாட்சியம்மன் சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வரும் ஜனவரி 6ந் தேதி ஆருத்ரா தரிசனமும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
    • கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் உள்ள கோவில்களில் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய வசதியாக சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று திருக்கோயில் தொண்டா் அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அறக்கட்டளையின் அமைப்பாளா் கொங்கு ராமகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் வரும் 2023 ஜனவரி 2ந் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும், விசாலாட்சியம்மன் சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வரும் ஜனவரி 6ந் தேதி ஆருத்ரா தரிசனமும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்த இரு நிகழ்வுகளுக்கும் வழக்கம்போல பக்தா்களின் வருகை கடந்த ஆண்டைவிட அதிகமாக வரக்கூடும் என்பதால், மாற்றுத்திறனாளா் பக்தா்கள் சுவாமியை தரிசிப்பதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, நிகழாண்டு முதல் கோவில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மாற்றுத் திறனாளி பக்தா்கள் செல்வதற்கும், தரிசிப்பதற்கும் என சிறப்பு விரைவு தரிசன பாதை மற்றும் அவா்களுக்குத் தேவையான சக்கர நாற்காலி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×