என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் எடுப்பதற்கு எதிர்ப்பு; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

    காரைக்காலில் ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் எடுப்பதற்கு எதிர்ப்பு; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் தமீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் கேஸ் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் நிரவி சாலையில், ஓ.என்.ஜி.சி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க தலைவர் முத்துகுமரசாமி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பழனிவேல், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க தமிழ்மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், புதுச்சேரி மாநில தலைவர் வின்சென்ட், காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் தமீம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுப்பதை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும். என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் கேஸ் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×