search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே ரூ.32 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
    X

    செஞ்சி அருகே தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூைஜ செய்து தொடங்கி வைத்தார்.

    செஞ்சி அருகே ரூ.32 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
    • சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலையாக அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற் றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன் பொதுகுழு உறுப்பினர் மணிவண்ணன் ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால கிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி கள் வாசு, அய்யா துரை, இக்பால்சையீத் முன்னாள் கவுன்சிலர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×