என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூலாங்குளம், நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட ரூ. 3.59 கோடி ஒதுக்கீடு- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு
- பூபால சமுத்திரம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார்.
- புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் மற்றும் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 59 லட்சம் நிதி பெற்று தந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு அந்தந்த பள்ளி களின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. சங்கர், அய்யனார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதி ராஜன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். ஆசிரியர் அப்துல் காதர் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வுக்கு தங்கள் ஊர் பள்ளிக்கு கூடுதலாக 20 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 2 லட்சம் நிதி பெற்று தந்ததற்கு நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியும், பாராட்டு தல்களை தெரிவிக்கப் பட்டது.
விழாவில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சேர்ம துரை உட்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் ஹெலன் நன்றி கூறினார்.
முன்னதாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பூலாங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 20 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ. 1.57 கோடி நிதியை தமிழக அரசிட மிருந்து பெற்று தந்ததற்கு பூலாங்குளம் பள்ளியின் சார்பாகவும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றி யம் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபால சமுத்திரம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் புதிய கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார். தொடர்ந்து ஆலங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கு அடிக்கல் நாட்டி னார்.
விழாவில் ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, அண்ணா தொழிற்சங்க மாநில அமைப்பு செயலா ளர் சேர்மதுரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன், ஆலங்குளம் நகர செய லாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர் செல்லத் துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்