என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உயிர்காக்கும் வீரருக்கு ரூ.5000 உதவித்தொகை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
- நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை 15.10.2021 முதல் அரசு அறிவித்தது.
- உயிர்காக்க உதவும் ஒரு நற்கருணை வீரருக்கு ரூ.5,000 வழங்கப்படும்.
விழுப்புரம்:
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, பொன்னான நேரத்தில், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர்காக்கும் நற்கருணை வீரருக்கு ரூ.5,000 கருணைத் தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தகவல். விழுப்புரம் மாவட்ட த்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை 15.10.2021 முதல் அரசு அறிவித்தது. அதன்படி பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவிபுரியும் நபர்களுக்கு ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5,000 தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலைப்பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நற்கருணை வீரர்கள் விபத்து நடைபெற்ற பகுதியினை சார்ந்த காவல்நிலையம் மற்றும் பாதிக்கப்பட்டவரை சேர்க்கப்படும் மருத்துவமனையிலிருந்து பரிந்துரை செய்யப்படுவார்கள். இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களின் உயிர்காக்க உதவும் ஒரு நற்கருணை வீரருக்கு ரூ.5,000 வழங்கப்படும். மேலும் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உயிர் காக்க உதவும் ஒன்றுக்கு மேற்பட்ட நற்கருணை வீரர்களுக்கு ரூ.5,000 தொகையினை சமமாக பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ள ப்படுகிறது. இத்திட்டமானது 31.03.2026 வரை நடை முறையில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.