search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொகுப்பூதியம் மாதம் ரூ.21000 வழங்க வேண்டும்- ஆஷா பணியாளர்கள் கோரிக்கை
    X

    தொகுப்பூதியம் மாதம் ரூ.21000 வழங்க வேண்டும்- ஆஷா பணியாளர்கள் கோரிக்கை

    • கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மேனகா தலைமை வகித்தார்.
    • இம்மாதம் 23 -ந் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் தர்ணா போராட்டம் நடக்கிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு ஏஐடியூசி தருமபுரி மாவட்ட ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை விளக்க பேரவை கூட்டம் பெரியார் மன்றத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மேனகா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தீபா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ருக்மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி,பொருளாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் சுகாதாரத்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கிராம செவிலியர்களுக்கு இணையாக பணிபுரியும் ஆஷா பணியாளர்களை சுகாதாரத்துறையில் பணி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் மாதம் ரூ.21000 வழங்க வேண்டும். ஆஷா பணியாளர்களுக்கு சுகாதாரத்துறையில் பணியாளர் அடையாள அட்டை, அரசு பஸ்களில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் இம்மாதம் 23 -ந் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்து எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் உத்ரா, ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×