search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் ரெயில் முன் பாய்ந்து  பள்ளி மாணவன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
    X

    ரெயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் விமல்ராஜ்

    திருப்பூரில் ரெயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    • எனக்கு வாழப்பிடிக்க வில்லை, அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் 2-வது ரெயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரெயில் அடிப்பட்டு பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிைடத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த சிறுவன் யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் (வயது 17) என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இதற்கிைடயே மாணவனின் வீட்டு தண்ணீர் கேன் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்த போது அது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரிய வந்தது.

    அந்த கடிதத்தில் , எனக்கு திக்கு வாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப்பிடிக்க வில்லை .அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. இது நானே எடுத்த முடிவு. ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×