என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல்- 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது
    X

    பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல்- 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது

    • சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • செல்போன் எண் பதிவுகள் மூலம் சிறுமியையும், சுந்தர்ராஜையும் கொடைக்கானலில் கண்டுபிடித்து போலீசார் அழைத்து வந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பாரதி நகர் காட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சுந்தர்ராஜ் பணிபுரியும் நிறுவனத்தில் ராணிப்பேட்டை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். அப்போது, சுந்தர்ராஜ் மற்றும் சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இதற்கிடையே, கடந்த 13-ந்தேதி சுந்தர்ராஜ் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் காணாமல் போன சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் செல்போன் எண் பதிவுகள் மூலம் சிறுமியையும், சுந்தர்ராஜையும் கொடைக்கானலில் கண்டுபிடித்து போலீசார் அழைத்து வந்தனர். கொடைக்கானலில் அறை எடுத்து மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வாசுகி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்து வேலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×