search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவலூர் அருகே வேளாண்மை துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி
    X

    வேளாண்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசா சோதனை நடத்தினர். 

    திருநாவலூர் அருகே வேளாண்மை துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி

    • திருநாவலூர் அருகே வேளாண்மை துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கெடிலம் பகுதியில் வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டது. இந்த மானிய பொருட்கள் நேற்று கெடிலம் பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்திற்கு வந்தது. இதனை அடுத்து விவசாயிகள் தங்களது விவசாய நில சிட்டா அடங்கள் கொடுத்து அரசு மானியத்தை வாங்கி சென்றனர். இதனால் வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகளின் கூட்டம் அலைமோதியது. அப்போது வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த உளுந்தூர்பேட்டை டெப்போ மேனேஜர் செந்தில்நாதன் விவசாயிகளிடமிருந்து விவசாய சிட்டா நகலை பெற்றுக் கொண்டு விவசாயிகளிடம் ரூபாய் 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார்.

    இதுகுறித்து சில விவசாயிகள் கேட்டதற்கு செந்தில்நாதன் சரிவர பதில் கூறவில்லை. இதனால் விவசாயிகள் கள்ள க்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி பாலசுதர் இன்ஸ்பெ க்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 6 மணி நேரம் நடந்தது. ஆய்வின் முடிவில் வேளாண்மை துறை அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 4,20,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வேளாண்மை துறை அதிகாரியான செந்தில்நாதனிடம் அரசு வழங்கிய மானியம் 40 ரூபாயை விட அதிகமாக விவசாயிகளிடம் பணம் வசூலித்து ரசீது இல்லாமல் மானிய பொருள்களை விற்பனை செய்ததற்கான காரணத்தை கேட்டனர். இதற்கு செந்தில்நாதன் செய்வதறியாது திகைத்து நின்றார். மேலும் போலீசார் இது குறித்து செந்தில்நாதன் மற்றும் அங்கு பணியாற்றிய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×