என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 2342 வழக்குகளுக்கு தீர்வு
- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.
- தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
தேனி:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்த மபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடி சட்டப் பணிகள் சார்பில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தலைமை உரையாற்றி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட சட்டப் பணிகளின் ஆணைக்குழுவின் செய லாளர் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ் வரவேற்றார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி (விரைவு) (நீதித்துறை நடுவர் நிலை) ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியகுளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி மாரியப்பன், நீதித்துறை நடுவர் கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. உத்த மபாளை யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மா வட்ட உரிமையியல் நீதிபதி சரவ ணசெந்தில்கு மார், நீதித்துறை நடுவர்(விரைவு) ரமேஷ், நீதித்துறை நடுவர் ராமநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெ ற்றது.
போடியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி உம்முல் பரிதா , நீதித்துறை நடுவர் வேலுமயில் முன்னி லையில் நடைபெற்றது.
தேனி, உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையி லுள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்