search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டியில் சாலை விரிவாக்க பணி மெத்தன போக்கை கண்டித்து 3-ந் தேதி கடை அடைப்பு
    X

    விக்கிரவாண்டியில் வர்த்தகர் சங்க கூட்டம் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடந்தது. அருகில் அமைப்பாளர் தனசேகரன்.

    விக்கிரவாண்டியில் சாலை விரிவாக்க பணி மெத்தன போக்கை கண்டித்து 3-ந் தேதி கடை அடைப்பு

    • கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
    • கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தன மாக நடைபெறுவதை கண்டித்து நடத்தப்படுகிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி கடை வீதியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி ஒப்பந்த தாரர் அலட்சிய போக்கை கண்டித்து கடை யடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். விக்கிரவாண்டியில் நடந்த வர்த்தகர் சங்க கூட்டத்திற்கு சங்க தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க அமைப்பாளர் தனசேகரன், கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியா வூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொரு ளாளர் சாதிக்பாட்ஷா வரவேற்றார்.

    கூட்டத்தில் விக்கிர வாண்டி கடைவீதியில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி, மின்கம் பங்கள் மாற்றியமைக்கும் பணிக்கு நியமனம் செய்யப் பட்ட ஒப்பந்ததார் அலட்சிய போக்கால் கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தனமாக நடைபெறுவதை கண்டித்தும், தினமும் வயதான முதியோர்கள், பொதுமக்கள் சாலையில் விழுந்து அடிபட்டு பாதிக்கப் படுவதை கண்டித்தும் வரும் மே 3-ந் தேதி வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளை மூடி கண்டன ஆர்பாட்டம் செய்வது எனவும், மே 5-ந் தேதி வணிகர் தினத்தன்று கடை விடுமுறை விட்டு ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் வணிகர்கள் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறை வேற்றினர். இதில் சங்க துணைத் தலைவர்கள் மணி வண்ணன், அஷரப் உசேன், நிர்வாகிகள் சங்கர், சிவா, சந்தோஷ், குமார கிருஷ்ணன், முருகவேல், சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×