search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கல்
    X

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரு பயனாளிக்கு இழப்பீட்டு ெதாகை வழங்கப்பட்டது.

    1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கல்

    • சிவகங்கை மாவட்ட அளவிலான லோக் அதாலத்தில் 1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கப்பட்டது.
    • ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் (ேலாக் அதாலத்) அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வக்கீல் ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    125 குற்றவியல் வழக்குகள், 150 காசோலை மோசடி வழக்குகள், 117 வங்கிக்கடன் வழக்குகள், 131 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், 85 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், 215 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 1,574 மற்ற குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 1,564 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.95லட்சத்து 64ஆயிரத்து 692 வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கிக்கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 19 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.18 லட்சத்து 95 ஆயிரம் வரை வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்காடிகளும் ஏராளமானோர் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர்.

    Next Story
    ×