search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை வேண்டி கறி விருந்து
    X

    மழை வேண்டி கறி விருந்து

    • மழை வேண்டி கறி விருந்து நடந்தது.
    • இதில் அனைத்து மதத்தினர் பங்கேற்றனர்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா பருத்திக் கண்மாயில் புனித மரியாயி கல்லறை உள்ளது. இந்த கல்லறை கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 23-ந் தேதி திருப்பலி பூஜையும் கறிவிருந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கறிவிருந்துடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. இதில் பருத்திகண்மாய் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டார்கள்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மரியாயி என்ற இளம் பெண் அப்பகுதியில் இயற்கை வைத்தியம் செய்து வந்தார்.இவரது சிகிச்சை முலம் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அவர் இறந்த பின்னர் அவரது சேவையை நினைவு கூறும்வகையில் சிவகங்கை அரசர் மாமன்னர் மருது பாண்டியர்கள் அப்பகுதியில் கல்லறைகட்ட இடம் கொடுத்தார்கள். கிராமமக்கள் சிறிதாக கோயில் அமைத்து கல்லறை அமைத்துள்ளார்கள் .அவரது நினைவைப் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி 23-ந் தேதி மழைபெய்யவும் ,உலகமக்கள் நோயின்றி நலமுடன் வாழ்வதற்காக திருப்பலி மற்றும் அன்னதானத்தை கிராமமக்கள் சார்பில் நடத்தி வருகிறார்கள்.இந்த ஆண்டு நேற்று நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை பருத்தி கண்மாய் கிராம மக்கள் செய்திருந்தார் கள்

    Next Story
    ×