search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்
    X

    போதையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்

    • போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

    அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×