என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2022/12/14/1806527-0081443147-2karaikudi.webp)
காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காரைக்குடியில் மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 5 விளக்கு எம்.ஜி.ஆர் சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி
தி.மு.க. அரசின் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து காரைக்குடி நகர அ.தி.மு.க. சார்பில் 5 விளக்கு எம்.ஜி.ஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சேர்மனுமான கற்பகம் இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் புலவர் பழனியப்பன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் சத்குரு தேவன், பிரகாஷ், குருபாலு, ராம்குமார், ராதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், விஜய், வழக்கறிஞர் அணி காளிதாஸ், சண்முகமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர். கவுன்சிலர் அமுதா நன்றி கூறினார்.