என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/18/1951967-2.webp)
அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில் தேரடி திடலில் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலா ளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில்குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை மற்றும் மாவட்ட நகர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடந்தபோது மழை பெய்தது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.