என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் ஊராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு
- சங்கராபுரம் ஊராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு நடந்தது.
- அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி மாங்குடி கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
பின்னர் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவர் பாண்டியராஜன் கவுன்சிலர்கள் சங்கரிபாபு, லட்சுமி, நல்லம்மாள், செல்வராணி, பாபு, வள்ளி, ரஞ்சித்குமார், ஆனந்தம், ராமஜெயம், ரேவதி, பாண்டிச்செல்வம் ஆகியோர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முறைப்படி உறுப்பி னர்களுக்கு தெரியப்படு த்தவில்லை என்றும், இதில் சட்ட விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது என்றும், புதிய வீடுகளுக்கான வரை பட அனுமதியில் முறை கேடுகள் தொடருகிறது.
சொக்கலிங்கபுரத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து பாதை அமைத்து கொடுத்தது தவறானதாகும். வைரவபுரத்தில் கோவில் அருகே இருந்த நாடக மேடையை கள ஆய்வு மேற்கொள்ளாமலும் மன்ற அனுமதி இல்லாமலும் இடிக்கப்பட்டது என்றும் பல்வேறு காரணங்களை கூறி வெளிநடப்பு செய்தனர்.
அதை மனுவாக கலெக்டருக்கும் அனுப்பி வைத்தனர்.கலெக்டர் உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், சங்கரா புரம் ஊராட்சி அலுவல கத்தில் ஆய்வு செய்தார்.
அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோசப் அருள்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
உதவி இயக்குநர் குமார் கூறுகையில், கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்துள்ளேன். புகார் அளித்தவர்களிடம் அதற்கான ஆதாரங்களை கேட்டுள்ளேன்.
வருவாய் கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டபிறகு எனது அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிப்பேன் என்றார்.
ஊராட்சி தலைவர் தேவி மாங்குடியின் ஆதரவு கவுன்சிலர்கள் கூறுகையில், பொதுமக்களின் வேண்டு கோளின் பேரிலேயே சொக்கலிங்கம் நகரில் பூங்கா இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
வைரவபுரம் நாடக மேடை பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து இருந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் ரேசன் கடைகட்டுவதற்காக அப்புறப்படுத்தப்பட்டது.
கட்டிட வரைபட அனுமதி அவ்வப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அனுமதி வழங்குவது வழக்கம். துணை தலைவர் மீது கடந்த காலங்களில் உள்ள புகாரை உதவி இயக்குநரிடம் மனுவாக அளித்துள்ளோம் என்றனர்.
ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி கூறுகையில், நான் பதவியேற்று சில நாட்கள்தான் ஆகிறது. இன்னும் 1½ வருடங்களே உள்ள நிலையில் துணை தலைவர் மற்றும் சில உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மக்கள் நல பணிகளை செய்ய முடியவில்லை.பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்