என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2022/08/01/1739342-mnmcollphoto.jpg)
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் "இயற்கை சீற்றமும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும்" என்ற தலைப்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மானாமதுரை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர், குமரேசன் கலந்துகொண்டு இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 300 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.