என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இஸ்லாமியர்களின் பங்கு குறித்த விளக்க கூட்டம்
- இஸ்லாமியர்களின் பங்கு குறித்த விளக்க கூட்டம் நடந்தது.
- ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இணைந்து ''இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு'' குறித்த விளக்க கூட்டத்தை நடத்தியது.
சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் துணைத்தலைவர் பாபா அமீர் பாதுஷா முன்னிலை வகித்தார். மதரசா ஆசிரியர் மவுலானா ஷேக் பாசில் யூசுப் கிராஅத் ஓதினார். மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளி மவுலானா முஹம்மது சிராஜுதீன் கீதம் பாடினார், இமாம் ஹிதாயா ஜும்மா பள்ளிவாசல் இமாம் மவுலானா நூருல் அஜீம் மிப்தாஹி தொகுத்து வழங்கினார். திருப்பத்தூர் வட்டார உலாமா சபை தலைவர் மவுலானா சையது முகமது இல்ஹாமி வரவேற்றார்.
திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் செயலாளர் சிக்கந்தர் பாதுஷா, தாருல் உலூம் தாவத்துல் ஹூதா மதரஸா தலைமை ஆசிரியர் மவுலானா மவுலவி முஹம்மது ஆதில் தாவூதி, கவிஞர் பாரதன், சிவகங்கை மாவட்ட உலமா சபை தலைவர் மவுலானா முஹம்மது ரிலா பாக்கவி ஆகியோர் ஆகியோர் பேசினர். மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் அலி நன்றி கூறினார்.