என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழடி அகழ்வாராய்ச்சியால் வளர்ச்சி அடைந்த கிராமங்கள்-கீழடி பஞ்சாயத்து தலைவர்
- கீழடி அகழ்வாராய்ச்சியால் கிராமங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
- கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மானாமதுரை, மார்ச்.5-
சிவகங்கை மாவட்டம் கீழடிபகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணியால் தற்போது இந்த பகுதியில் உள்ள ஊராட்சிகள் வளர்ச்சி அடைந்து வருகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை உலகில் அனைவரும் தெரிந்து கொள்ள அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்து கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, மணலூர்ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.
இங்கு கிடைத்த அரிய பொருள்களை தமிழக மக்கள் அனைத்து பகுதி களிலும் இருந்து பார்க்கும் வகையில் சுமார் ரூ.18 கோடி செலவில் தமிழக கட்டிட கலைக்கு எடுத்து காட்டாக கீழடி அருங் காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திருக்கரங்கலால் இன்று மாலை இது திறக்கப் படுகிறது. இதுதவிர தமிழகத்தில் இன்னும் பலகிராம ஊராட்சி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிநடைபெற்றுவருகிறது. இந்த பணிகளால் கீழடி பகுதியில் புதியதார்சாலை, சிமெண்டு சாலை, பள்ளி களில் மேம்பாடுவசதி, கூடுதல் போக்குவரத்து வசதிகள் கிடைத்தன.
மேலும் கீழடி ஊராட்சி தமிழகத்தின் சுற்றுலா தலமாக மாறி வருகிறது என்று கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.