search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்-அமைச்சர் பேச்சு
    X

    எஸ்.புதூர் அருகே உள்ள மேலவண்ணாயிரிப்பி ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்-அமைச்சர் பேச்சு

    • முதல்-அமைச்சர் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்கென நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ.21.07 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 2 வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி, பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென துறை ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை களை சிறப்பாக மேற் கொண்டு வருகிறார்கள்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்களின் அடிப்படைத்தே வைகளை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு மக்கள் பிரதி நிதிகளின் கடமையாகும். ஆகவே, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து, எடுத்துரைத்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் மேலவண்ணாயிரிப்பு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னம்மாள், உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×