search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு
    X

    சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு

    • சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த ஆய்வுகளின் போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவு, வட்டாட்சியர் அலுவல கங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களி டம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப் பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணியாளர்க ளின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறை வாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப் பட்டு வரும் கோப்புகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவவும், தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப் பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜி முன்னிசா, வட்டாட்சியர்கள் சாந்தி (சிங்கம்புணரி), வெங்கடேசன் (திருப் பத்தூர்), தனி வட்டாட்சி யர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஆனந்தன் (சிங்கம் புணரி), கண்ணதாசன் (திருப்பத்தூர்) உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×