search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 90 வீடுகள் கட்டும் பணி
    X

    சிவகங்கை யூனியன் ஒக்கூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இலங்கை அகதிகளுக்கான வீடுகளின் கட்டுமான பணிகளை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளார்.

    ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 90 வீடுகள் கட்டும் பணி

    • ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 90 வீடுகள் கட்டும் பணிகளை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆய்வு செய்தார்.
    • முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில் இலங்கை அகதிகளுக்கான குடியிரு ப்புக்கள் கட்ட ப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் குறித்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜெசிந்தா லாசரஸ் , கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முகாம் வாழ் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

    நமது அண்டை நாடான இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை யின் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நலனை காக்கும் வகை யில் அவர்களின் தாய் தமிழகமாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி பாதுகாத்து வருகிறது.

    அதன்படி சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய

    6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கென அரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவ னங்களின் பங்களிப்புடன் ஆய்வு செய்து, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர் ஊராட்சியில் மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில், ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் என ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து தரமான முறையில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், வட்டாட்சியர் பாலகுரு, தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு) உமா உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×