என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பாச்சேத்தி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
58 அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி

- 58 அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.
- ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சேத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சரால் 2022-23-ம் நிதியாண்டில் ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிட பணிகளை மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 58 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 120 வகுப்ப றைகள் எண்ணிக்கையில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற கல்வி யாண்டு தொடங்குவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயங்கண்ணி, ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.