search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க கோரிக்கை
    X

    பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க கோரிக்கை

    • வி.ஏ.ஓ. பதிவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகங்கை

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் சந்தான கிருஷ்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    விவசாயத்துறை பணியான அக்ரி ஸ்டாக் பணியை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயப்படுத்த கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட செயல்படாத சிம்கார்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதிலாக அனைவருக்கும் இணையதள சேவை செலவின தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருவாய் கணக்குகள் தனியாக உள்ளதற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சான்றுகள் வழங்குதல் தொடர்பான களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு மூலம் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் செல்வன், பாண்டியன், விஜயராஜ், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தென்றல் தமிழோசை நன்றி கூறினார்.

    Next Story
    ×