search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு
    X

    மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு

    • மானாமதுரையில் மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்டது. 18,20,26,27-வது வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இந்த கோவிலை வழிபட்டு வருகின்றனர்.

    ஆடி, பங்குனி முளைப் பாரி உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் கோவில் வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அத்துமீறுவதால் இந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினர்.

    தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறை நிர்வாகம் இந்த பகுதியில் நில அளவீடு செய்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-

    பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து திரு விழாக்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சுவர் அமைக்காமல் இருந்தபோது சமூக விரோதிகள் கோவி லுக்குள் அத்துமீறியதால் கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கோவிலின் புனித தன்மை பாது காக்கப்படுகிறது. கோவி லுக்கு பாதுகாப்பாக உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கலெக் மரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×