search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின் போட்டி தேர்வுக்்கான இலவச பயிற்சி வகுப்புகள்
    X

    மத்திய அரசின் போட்டி தேர்வுக்்கான இலவச பயிற்சி வகுப்புகள்

    • சிவகங்கையில் மத்திய அரசின் போட்டி தேர்வுக்்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
    • மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அலுவலக மயில்கேட் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள SSC CuSL போட்டித் தேர்வுக்கான அறிவிப்பில் சுமார் 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ேதர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். 4.1.2023 ஆகும். இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    அவ்வாறு விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு கல்விச்சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் வரும் பட்சத்தில் மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து தரப்படும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (14-ந் தேதி) முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த அலுவலகத்தின் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. சீரான இடைவெளியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பை குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள tamlianducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பெயரை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து இந்த இணையதளத்தில் மத்திய-மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வு களுக்கான பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×